உள்ளடக்கத்துக்குச் செல்

கஸ்தூரி இரங்கப்ப நாயக்கன் கோட்டை

ஆள்கூறுகள்: 13°44′35″N 76°54′50″E / 13.74306°N 76.91389°E / 13.74306; 76.91389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கஸ்தூரி இரங்கப்ப நாயக்கன் கோட்டை
கஸ்தூரி இரங்கப்ப நாயக்கன் கோட்டை is located in இந்தியா
கஸ்தூரி இரங்கப்ப நாயக்கன் கோட்டை
Shown within India
இருப்பிடம்சிரா], தும்கூர் மாவட்டம், கர்நாடகா, இந்தியா
ஆயத்தொலைகள்13°44′35″N 76°54′50″E / 13.74306°N 76.91389°E / 13.74306; 76.91389
வகைபாதுகாப்புச் சுவர்
பரப்பளவு197.5 ஏக்கர்கள் (79.9 ha)
வரலாறு
கட்டப்பட்டதுபொ.ச.17ஆம் நூற்றாண்டு
பயனற்றுப்போனதுஇடிபாடுகளுடன் காணப்படுகிறது
பகுதிக் குறிப்புகள்
உரிமையாளர்சித்திரதுர்க நாயக்கர்கள்

கஸ்தூரி இரங்கப்ப நாயக்கன் கோட்டை ( Kasturi Rangappa Nayaka Fort ) என்பது கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்திலிள்ள சிராவில் உள்ள ஒரு கோட்டையாகும். இதற்கு விசயநகரப் பேரரசிலும், போசாளப் பேரரசிலும் படையணித் தலைவர்களாக பணிபுரிந்த சித்திரதுர்க நாயக்கர்கள் வழிவந்த கஸ்தூரி ரங்கப்ப நாயக்கனின் (1602–1652) பெயரிடப்பட்டது. இவர் 17 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விஜயநகர் பேரரசின் கீழ் பாளையக்காரராக சிராவை ஆட்சி செய்தார். இவர்களின் ஆட்சிக்குப் பின்னர், கோட்டையும் சிரா மாகாணமும் பல ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் வந்தது.[1][2][3] தற்போது கோட்டை இடிபாடுகளுடன் காணப்படுகிறது இந்தியத் தொல்லியல் ஆய்வகம் மூலம் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.[4]

அமைவிடம்

[தொகு]

நாயக்கன் கோட்டை கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் உள்ள சிரா நகரில் அமைந்துள்ளது. இது தேசிய நெடுஞ்சாலை-4 ( புனே - சென்னை ) மற்றும் நெடுஞ்சாலை-234 ( மங்களூர் - விழுப்புரம் ) செல்லும் வழியில் அமைந்துள்ளது. இது பெங்களூரிலிருந்து 123 கிலோமீட்டர் (76 மைல்) தொலைவிலுள்ளது.ref name=City/>[5]

வரலாறு

[தொகு]

கோட்டையின் கட்டிய வரலாறு 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்குகிறது. விசயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் சித்திரதுர்கம் நகரை தலைநகராகக் கொண்டு கர்நாடகத்தின் கிழக்கு பகுதிகளை நாயக்கர்கள் ஆட்சி புரிந்தனர். கஸ்தூரி ரங்கப்ப நாயக்கர் ஒரு பாளையக்காரராக சிராவை ஆட்சி செய்தபோது [6] சிரா நகரத்துக்கும் கோட்டைக்கும் அடித்தளம் அமைத்தார்.[6] கோட்டை நிறைவடைவதற்கு முன்னர், பிஜாப்பூரின் ஆட்சியாளர் இரந்துல்லா கான் அனுப்பிய இராணுவத்தால் சிரா கைப்பற்றப்பட்டது. அவரது படைத்தலைவர் அப்சல் கான் தலைமையிலான ஒரு படை கஸ்தூரி ரங்கப்ப நாயக்கரைத் தோற்கடித்து கொலை செய்தனர்.[7] பின்னர், இப்பகுதியில் ஆளுநராக நியமிக்கபட்ட மாலிக் உசேன் கோட்டையின் கட்டுமானப் பணிகளை முடித்து, நகரத்தை சுற்றி ஒரு மண் சுவரையும் கட்டினார்.[2][3][6]

சிரா, சிலகாலம் விஜயநகரப் பேரரசிடமும் (1638 முதல் 1687 வரை), சிலகாலம் பிஜப்பூர் சுல்தானகத்திடமும், சிலகாலம் முகலாயர்களிடமும் (1687 முதல் 1757 வரை) பின்னர், மராட்டியப் பேரரசிடமும் (1757 முதல் 1759 மற்றும் 1766 வரை), பின்னர், உடையார்களிடமும் (1799 முதல் 1799 வரை) 1947) கடைசியாக பிரித்தானியர்களிடமும் (1947 வரை) மாறிமாறி இருந்தது.[1][2][4]

அம்சங்கள்

[தொகு]

கல் மற்றும் செங்கற்களால் ஆன இந்த கோட்டை 197.5 ஏக்கர் (79.9 ஹெக்டேர்) பரப்பளவில் பரவியுள்ளது. மேலும் பல வரலாற்று நினைவுச்சின்னங்களைக் கொண்டுள்ளது.[1] இந்த கோட்டை ஒரு அகழியால் சூழப்பட்டிருந்தது. நிரந்தர கட்டமைப்பாக இருந்த கல்லாலான பாறை கூட கோட்டையின் ஒரு பகுதியாக அமைந்தது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Plea to protect Sira fort". Deccan Herald. 24 February 2007 இம் மூலத்தில் இருந்து 14 ஏப்ரல் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160414181400/http://archive.deccanherald.com/DeccanHerald.com/Content/Dec242007/district2007122442860.asp. பார்த்த நாள்: 3 April 2016. 
  2. 2.0 2.1 2.2 "Sira". Sira Municipal Administration. Archived from the original on 16 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 3 April 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. 3.0 3.1 "Centre promises to keep Sira Fort safe". Bangalore Mirror. 31 December 2015. http://www.bangaloremirror.com/bangalore/others/Centrepromises-to-keep-Sira-Fort-safe/articleshow/50386596.cms. பார்த்த நாள்: 3 April 2016. 
  4. 4.0 4.1 "Sira fort restoration rankles activists". The Hindu. 22 April 2015. http://www.thehindu.com/news/national/karnataka/sira-fort-restoration-rankles-activists/article7126958.ece. பார்த்த நாள்: 3 April 2016. 
  5. George Michell (1 May 2013). Southern India: A Guide to Monuments Sites & Museums. Roli Books Private Limited. pp. 192–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7436-903-1.
  6. 6.0 6.1 6.2 6.3 B. L. Rice (February 2001). Mysore: A Gazetteer Compiled for Government. Asian Educational Services. pp. 198–99. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-0977-8.
  7. A. Satyanarayana; Karnataka (India). Directorate of Archaeology & Museums (1996). History of the Wodeyars of Mysore, 1610–1748. Directorate of Archaeology and Museums.